இடுகைகள்

 Ramayanam - Sundara Kandam (6) பொன்பிறழ் சிமயக் கோடு      பொடியுற,பொறியும் சிந்த, மின்பிறழ்குடுமிக் குன்றம்      வெரிந்உறவிரியும் வேலை, புன் புற மயிரும்பூவா,      கண்புலம்புறத்து நாறா, வன்பறழ் வாயில்கவ்வி,      வல்லியம்இரிந்த மாதோ.        மின்பிறழ்குடுமிக் குன்றம்  - ஒளி விளங்கும்தலைமையுடைய மகேந்திர மலையின்;  வெரிந்  - முதுகின்கண்;  பொன்பிறழ் சிமயக்கோடு  - பொன்போலப் பொலிவு பெற்ற சிகரமானது;  உற  - நன்றாக அழுந்த (அதனால்);  பொடியுறப் பொறி சிந்த  - பொடிப் பொடியாகிப் பொறி பறக்க; விரியும் வேலை  - பிளவுபடும் சமயத்தில்;  வல்லியம்  - புலிகள்;  புன்புற மயிரும் பூவா  - மெல்லிய உடம்பில் பூனை மயிரும் முளைக்காத;  புறத்துக் கட்புலம் நாறா  - வெளியில் தோன்றும்படி கண்கள் திறவாத;  வன்பறழ்  - (தம்முடைய) வலிமையான குட்டிகளை;  வாயில் கவ்வி இரிந்த  - வாயில் பற்றிஅஞ்சியோடின. ...
கம்பராமாயணம் - சுந்தர காண்டம்  வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையைக் கிழிய வீசி, நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர், 'உய்தும் நாம் என்பது என்னே? உறு வலிக் கலுழன் ஊழின் எய்தினான் ஆம்' என்று அஞ்சி, மறுக்கம் உற்று, இரியல்போனார். 21 துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அற, சுறவு தூங்க, ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய, ஊழிக் காலின், வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி தள்ளிய திரைகள் முந்துற்று, இலங்கைமேல் தவழ்ந்த மாதோ. 22 கொட்புறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும், கண்புலன் கதுவல் ஆகா வேகத்தான், கடலும் மண்ணும் உட்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப் புட்பக விமானம்தான் அவ் இலங்கைமேல் போவது ஒத்தான். 24 கேழ் உலாம் முழு நிலாவின் கிளர் ஒளி இருளைக் கீற, பாழி மா மேரு நாண, விசும்பு உறப் படர்ந்த தோளான், ஆழி சூழ் உலகம் எல்லாம் அருங் கனல் முருங்க உண்ணும் ஊழி நாள், வட பால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான். 30