Ramayanam - Sundara Kandam (6)
பொன்பிறழ் சிமயக் கோடு |
மின்பிறழ்குடுமிக் குன்றம் - ஒளி விளங்கும்தலைமையுடைய
மகேந்திர மலையின்; வெரிந் - முதுகின்கண்; பொன்பிறழ் சிமயக்கோடு -
பொன்போலப் பொலிவு பெற்ற சிகரமானது; உற - நன்றாக அழுந்த
(அதனால்); பொடியுறப் பொறி சிந்த - பொடிப் பொடியாகிப் பொறி பறக்க;
விரியும் வேலை - பிளவுபடும் சமயத்தில்; வல்லியம் - புலிகள்; புன்புற
மயிரும் பூவா - மெல்லிய உடம்பில் பூனை மயிரும் முளைக்காத; புறத்துக்
கட்புலம் நாறா - வெளியில் தோன்றும்படி கண்கள் திறவாத; வன்பறழ் -
(தம்முடைய) வலிமையான குட்டிகளை; வாயில் கவ்வி இரிந்த - வாயில் பற்றிஅஞ்சியோடின.
சிகரம்பொடியாகி மலை பிளந்தது என்றும் கூறலாம். கோடு அழுந்தக்
குன்றம் பிளந்தது என்று இங்கே கொள்ளப் பட்டது. சிமயம் - சிகரம் -
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை (சிலம்பு 5-97) கோடு - சிகரத்தின்
நுனி. பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே (புறம் 2). உடலில்
தோன்றும் புல்லிய மயிரைப் பூனைமயிர் என்பர். சங்க இலக்கியம் அரிமயிர்
என்று பேசும். பறழ் - குட்டி, நாய், புலி முதலான விலங்குகளின் குட்டியைப்
பறழ் என்பது மரபு. புலிப்பறழ் அன்ன பூஞ்சினை வேங்கை (மரபியல்
மேற்கோள்) மலைக்கு முதுகு கூறப்பெற்றுள்ளது. (6)
கருத்துகள்
கருத்துரையிடுக